பதிவு:2025-07-25 11:23:10
மோவூர் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜூலை 25 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மோவூர் கிராமத்தில் புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்.
TLR 369 மோவூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இந்த கிராமம் FOCUS BLOCK ல் உள்ள நிலையில் சங்கத்திற்கு இலவசமாக ரூ.15,220 மதிப்பிலான பால் கொள்முதல் உபகரணங்கள் மற்றும் ரூ.1,59,417 மதிப்பிலான பால் பகுப்பாய்வு கருவி ஆகியவை வழங்கப்பட்டது. மேலும் உறுப்பினர்கள் அனைவருக்கும் 50 கிலோ கால்நடை தீவனம் மற்றும் 1 கிலோ தாது உப்புக்கலவை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகள் கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் கால்நடை சிகிச்சை முகாம் மற்றும் சினை பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு சங்க உறுப்பினர்களுக்கு தேவையான கால்நடை மருந்துகள் வழங்கப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தரமான ஆவின் கால்நடை தீவனத்தினை கறவை மாடுகளுக்கு வழங்கி தரமான பால் கொள்முதல் செய்து அதன் மூலம் அதிக கொள்முதல் விலையினை பெற சங்க உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தினார். அனைத்து பால் உற்பத்தியாளர்களும் ஆவின் நிறுவனத்திற்கு பால் வழங்கி பயன் அமையுமாறும், கால்நடைகளுக்கு சத்தான தீவனம் வழங்குமாறும் அறிவுறுத்தினார்.
மேலும், கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இதில் 427 கால்நடைகளுக்கு கோமேரி தடுப்பூசி குடற்புழு நீக்கம், Doppler Ultra Sound கருவி மூலம் சினைபரிசோதனை, சினை பிடிகாத கால்நடைகளுக்கு சிகிச்சை வழங்கப்பட்டது, இதில் துணை பதிவாளர் பால்வளம் கணேசன், ஆவின் பொது மேலாளர் ராஜ்குமார், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குநர் ஜெயந்தி, உதவி பொது மேலாளர்கள், துணை இயக்குநர்கள், கால்நடை மருத்துவர்கள், கூட்டுறவு சார்பதிவாளர், முதுநிலை ஆய்வாளர்கள் மற்றும், விரிவாக்க அலுவலர்கள் கலந்து கொண்டனர்.