பதிவு:2025-08-13 11:38:03
திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள தனியார் பள்ளியில் அமைச்சர் சா.மு.நாசர் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் :
திருவள்ளூர் ஆக 12 : தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை, நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் ஜே.என். சாலையில் உள்ள தனியார் பள்ளியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் காணொளி காட்சி வாயிலாக நேரலையில் கலந்து கொண்டு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இதில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு அடைந்தனர். பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் செ நோ டு டரக்ஸ் என்ற வாசக வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் போதை எதிர்ப்பு மன்றத்தின் வாயிலாக போதைக்கு எதிராக சிறப்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக அரசு உயர்நிலைப்பள்ளி, இராமதண்டலம் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி, வெள்ளியூர். கே.எல்.கே. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பேரம்பாக்கம். DRBCCC இந்து மேல்நிலைப்பள்ளி, திருவள்ளூர். செயின்ட் ஆனிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி, மீஞ்சூர். மகாலட்சுமி மகளிர் கல்லூரி, பருத்திப்பட்டு. S.A. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவேற்காடு. திருமுருகன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொசவன்பாளையம். DRBCCC இந்து கல்லூரி, பட்டாபிராம். ஸ்ரீதேவி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொன்னேரி. ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவியர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் நடத்திய போதைக்கு எதிராக விழிப்புணர்வு நாடகத்தை பார்வையிட்டார்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகரன்(பொன்னேரி), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தர் சுக்லா,உதவி ஆணையர் (கலால்) கணேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்(பொ) மோகனா, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தேன்மொழி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.