அரசு மருத்துவர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் ஓராண்டு விதிமுறையை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல் :

பதிவு:2025-08-13 11:39:36



அரசு மருத்துவர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் ஓராண்டு விதிமுறையை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல் :

அரசு மருத்துவர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் ஓராண்டு விதிமுறையை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் வலியுறுத்தல் :

திருவள்ளூர் ஆக 12 : அரசு மருத்துவர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வில் மருத்துவமனையில் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை தளர்த்த வேண்டும் என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பிரபுசங்கர் தெரிவித்தார். அரசு மருத்துவமனையில் சீனியாரிட்டி உள்ள மருத்துவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதியில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் கலந்தாய்வு நடத்தி, ஏப்ரல் 1 இல் பணியில் சேருவது வழக்கமாகும். இது போன்று நடத்தினால் மட்டும் தான் இந்த விதியை வலியுறுத்த முடியும். இதை தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நாள்களில் கலந்தாய்வு நடத்தவும் வலியுறுத்தி வருகிறது.இந்த ஓராண்டுக்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற விதிமுறையால் தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரம் மருத்துவர்கள் பாதிக்கப்படுவார்கள். இந்த உத்தரவினால் பதவி மூப்பு உள்ளவர்கள் பாதிக்கப்படுவார்கள். ஆனால் ஜூனியர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே கலந்தாய்வு முகாம் செப்டம்பர் மாதம் நடத்தப்பட உள்ளதால் அரசு மருத்துவர்கள் மத்தியில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 120 மருத்துவர்கள் புகார் செய்த நிலையில், அதை அப்படியே சங்கம் மூலம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும், செயலாளரும் பேசி நல்ல முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் மாநிலம் முழுவதும் அரசு டாக்டர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில பொருளாளர் பிரபுசங்கர் செய்தியாளர்களிடம் கூறினார்.