ஏழாம் வகுப்பு நரிக்குறவர் இன மாணவனுக்கு பிறப்புச் சான்றிதழ் இல்லாததால் ஆதார் அட்டை பெற முடியாமல் தவிப்பு : குடும்பத்துடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் :

பதிவு:2025-08-13 11:41:07

திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அம்மா நகர் பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்ற ஏழாம் வகுப்பு மாணவன் அப்பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவனுக்கு பிறந்த போது பிறப்புச் சான்றிதழ் வாங்காததால் தற்போது ஆதார் அட்டை பெற முடியவில்லை. இந்நிலையில் இதுகுறித்து கோட்டாட்சியர் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பள்ளியில் ஆதார் கார்டு இல்லாமல் பள்ளிக்கு வர வேண்டாம் என ஆசிரியர்கள் கூறியதால் பெற்றோருடன் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்து தனக்கு உடனடியாக பிறப்புச் சான்றிதழ், ஆதார் அட்டை வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே தாய் தந்தையுடன் அமர்ந்து புத்தகத்தை வைத்து படிக்க தொடங்கினான்.

கூட்டத்தில் மனு கொடுக்க வந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்வதாக உறுதியளித்ததை அடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.