ஊத்துக்கோட்டை அருகே புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு :

பதிவு:2025-08-13 11:42:39

திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட செங்காத்தா குளம் கிராமத்தில் அருந்ததியர் மற்றும் சிறுபான்மையினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஐந்து கிராமங்களை இணைத்து தமிழக அரசு சார்பில் அறிவுசார் நகரம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இங்கு குடியிருப்பு பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் கொலை கொள்ளை என்பது சர்வ சாதாரணமாக நடைபெறுவதாகவும், மேலும் பள்ளிக்கு சென்று வரக்கூடிய மாணவ மாணவிகளுக்கு இந்த டாஸ்மாக் கடை திறப்பால் அதிக பாதிப்பு ஏற்படும் என்பதால் டாஸ்மாக் கடையை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அருந்ததியர் மற்றும் சிறுபான்மையினர் மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.