பதிவு:2025-08-13 11:44:29
திருத்தணி அருகே 15 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 15000 அபராதம் விதித்து திருவள்ளுர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு :
திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த வி.கே.என். கண்டிகை பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமியை கடந்த 2021 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் வெங்கடேசன் -24 ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.
இந்த வழக்கில் சிறையில் இருந்து வெங்கடேசன் பிணையில் வெளியே வந்தார்,வழக்கின் விசாரணை திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணையானது போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்பாக வந்தது,பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக அரசு தரப்பு வழக்கறிஞராக விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார்,
இந்த வழக்கில் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் வெங்கடேசனுக்கு பிரிவு 366 ன் படி 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5000 அபராதமும் அதேபோன்று பிரிவு 376-ன் படி 7 ஆண்டு சிறை தண்டனையும் 5000 அபராதமும் என இரு பிரிவு கீழ் ஏககாலத்தில் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் அதேபோன்று பிரிவு 5(l) -ன் படி 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் என ஒட்டு மொத்தமாக 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15000 அபராதமும் விதித்து திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீர்ப்பளித்துள்ளா