வேப்பம்பட்டு பேக்கரியில் ஓசி பொருட்கள் கேட்டு ரவுடிகள் அட்டகாசம்: தட்டி கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டில் ஈடுபட்ட 2 ரவுடிகளை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் :

பதிவு:2025-08-13 11:46:16

திருவள்ளூர் ஆக 12 : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள பேக்கரியில் நேற்று இரவு வந்த இரண்டு இளைஞர்கள் பேக்கரியில் ஓசியில் பொருட்கள் கேட்டுள்ளனர். இதனை பேக்கரியில் இருந்த உரிமையாளர் நந்தகுமார் ஓசியில் தர முடியாது என மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் கடையில் இருந்த பொருட்களை தூக்கி தரையில் வீசியதுடன் இனிமேல் இங்கு கடை நடத்தினால் உங்களை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்தார், இதையடுத்து அருகில் இருந்தவர் அந்த இரண்டு இளைஞர்களிடமும் ஏன் பொருட்களை தூக்கி தரையில் வீசியினர்கள் என தட்டி கேட்டுள்ளார்.

அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக விரட்டி வெட்டத் தொடங்கினர். இதனால் கையில் பலத்த வெட்டு காயத்துடன் இளைஞர்களிடமிருந்து தப்பித்த பக்கத்து கடைக்காரர் ஆபத்தான நிலையில் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சம்பவம் குறித்து தகவல் அறிந்து செவ்வாய்பேட்டை போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை மேற்கொண்டதில் கடையில் ஓசி பொருட்களை கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டது அதே பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் கோபால் என்பதும் இவர்கள் இருவரின் மீதும் ஏற்கனவே இரண்டு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. உடனடியாக விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் அருண் மற்றும் கோபால் ஆகிய 2 நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

ஓசியில் பொருட்கள் கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன் தட்டிக்கேட்ட நபரை கத்தியால் வெட்டிய சம்பவம் வேப்பம்பட்டு பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விடியா திமு.க ஆட்சியில் ஓசியில் பொருட்களை கேட்பது, தராவிட்டால் தாக்குவது தொடர்கதையாக இருக்கிறது.