திருவேற்காடு நகராட்சி வடக்கு மாட வீதி கூட்டுறவு நியாய விலைக்கடையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர் :

பதிவு:2025-08-13 11:50:20



திருவேற்காடு நகராட்சி வடக்கு மாட வீதி கூட்டுறவு நியாய விலைக்கடையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர் :

திருவேற்காடு நகராட்சி வடக்கு மாட வீதி கூட்டுறவு நியாய விலைக்கடையில் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் : அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர் :

திருவள்ளூர் ஆக 13 : திருவள்ளூர் மாவட்டத்தில், திருவேற்காடு நகராட்சி வடக்கு மாட வீதி, கூட்டுறவு நியாய விலைக்கடையில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று அரிசி, சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்களை விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.அப்போது அமைச்சர் தெரிவித்ததாவது :

தமிழ்நாடு முதலமைச்சர் "முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை" வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளின் இல்லத்திற்கே சென்று குடிமை பொருட்கள் வழங்கும் திட்டத்தினை தாயுள்ளத்ததோடு, 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள். 18 வயதிற்குட்பட்டவர்களையும், 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களையும் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் ஒரு நபர் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள். ஒன்றுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்ப அட்டைதாரர்கள், மூன்றாம் நபரின் உதவி தேவைப்படும் குடும்ப அட்டைதாரர்கள் மக்கள் நலன் சார்ந்த இத்திட்டம் சிறப்புக் கவனம் தேவைப்படும் பிரிவினரின் வாழ்வை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பையும் உறுதி செய்யும். தமிழ்நாடடில் இத்திட்டத்தின் வாயிலாக 34,809 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 15,81364 குடும்ப அட்டைகளில் உள்ள 20,42,657 பயனாளர்களும், 91,909 குடும்ப அட்டைகளில் உள்ள 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 16,73,333 குடும்ப அட்டைகளில் உள்ள 21,70,454 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் 1102 நியாயவிலைக் கடைகளை சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களைக் கொண்ட 37,990 குடும்ப அட்டைகளில் உள்ள 47,193 பயனாளர்களும், 3,441 குடும்ப அட்டைகளில் உள்ள 4,660 மாற்றுத்தினாளிகளும், என மொத்தம் 41,431 குடும்ப அட்டைகளில் உள்ள 51,853 பயனாளர்களுக்கு அவர்தம் இல்லங்களிலேயே குடிமைப் பொருட்களை விநியோகம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்திற்காக நியாயவிலைக் கடைகளை குழுக்களாக பிரிக்கப்பட்டு நகர்புற பகுதியில் செயல்படும் 124 நியாய விலைக்கடைகளை ஒருங்கிணைத்து 80 குழுக்களாகவும் கிராமப்புற பகுதியில் செயல்படும் 978 நியாயவிலைக் கடைகளை ஒருங்கிணைத்து 474 குழுக்களாகவும் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்கடைகள் செயல்பட ஏதுவாக ஊரகப்பகுதியில் 567 வாகனங்கள் மற்றும் நகர் பகுதியில் 111 வாகனங்கள் என ஆக மொத்தம் 678 வாகனங்கள் மூலம் குடிமைப் பொருட்கள் விநியோகம் செய்யப்படவுள்ளது அமைச்சர் கூறினார்.

இதில் திருவேற்காடு நகர் மன்ற தலைவர் என்.இ.கே. மூர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி. சண்முகவள்ளி, துணைப்பதிவாளர் (பொது விநியோக திட்டம்) பாலாஜி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் கலைவாணி, மேகநாதன், மேட்டுப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர், விற்பனையாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.