திருவள்ளூரில் 79-வது சுதந்திர தின விழா : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தேசியக் கொடி ஏற்றி வைத்து, வெள்ளைப் புறாக்கள், மூவர்ண பலூன்களை வானில் பறக்கவிட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் :

பதிவு:2025-08-16 19:02:39

திருவள்ளூர் ஆக 15 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 79- வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார். இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணி வகுப்பை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் வானில் மூவர்ண பலூன்கள் மற்றும் சமாதான புறாக்களை வானில் பறக்க விட்டார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.26 லட்சத்து 67 ஆயிரத்து 500 மதிப்பில் 2 பேருக்கும்,தாட்கோ மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சத்து 28 ஆயிரத்து 936 மதிப்பில் வழங்கப்பட்டது. அதேபோல் மாவட்ட தொழில் மையம் சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 94 ஆயிரம் மதிப்பிலும்,திருவள்ளூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.33 ஆயிரத்து 450 மதிப்பிலும்,தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பில்,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை 3 பயனாளிகள் என மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சத்து 23 ஆயிரத்து 886 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து வருவாய்த்துறையினர், சுகாதார துறையினர், காவல் துறையினருக்கு சான்றிதழ்கள் கொடுத்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் சுகாதாரத் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கும், தூய்மைப் பணியாளர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கப்பட்டனர். அதே போல் சுதந்திரப் போராட்ட தியாகிகளும் கவுரவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் சேகர், துணைக்காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் சேதுராஜன், செ.அருணா உட்பட பலர் கலந்து கொண்டனர்.