இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்காக வழங்கிய விளை நிலத்திற்கு பட்டா வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பதாக வாரிசுதாரர்கள் குற்றச்சாட்டு :

பதிவு:2025-08-16 19:11:39

திருவள்ளூர் ஆக 16 : இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட்ட விளைநிலங்களை பல ஆண்டுகளாக அனுபவித்து வரும் நிலையில் பட்டா வழங்கவில்லை. கடந்த 1939 முதல் 1945 வரையில் நடைபெற்ற இரண்டாம் உலகப்போரில் பணியாற்றிய ராணுவத்தினருக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் எதுவும் கிடையாது. அதனால், மறுவாழ்வாதாரத்திற்காக தமிழக அரசால் 6 ஏக்கர் விளைநிலம் வழங்க உத்தரவிட்டது. அதன்பேரில் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே கூடப்பாக்கம் மற்றும் மெய்யூர் கிராமத்தில் இரண்டாம் உலகப்போரில் பணிபுரிந்த ராணுவ வீரர்களின் சேவையை பாராட்டி கடந்த 1948 இல் முன்னாள் ராணுவத்தினர் நில குடியேற்ற சங்கம் மூலம் 53 குடும்பத்தினருக்கு தமிழக அரசால் தலா 6 ஏக்கர் விளை நிலம் பிரித்து பரிசாக வழங்கப்பட்டது.

இந்த நிலத்தை அன்று முதல் இதுவரையில் கடந்த 75 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஆனால், இதற்கு பட்டா வழங்க கடந்த 1983 ஆம் ஆண்டு அதிமுக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டும் இதுவரையில் வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த 2023-இல் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியபோது, உயர்நீதிமன்றமும் 12 வார கால அவகாசத்தில் பட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த நிலையில் 20 மாதங்கள் ஆன நிலையில், ஏற்கெனவே பூந்தமல்லி வட்டாட்சியர் புலத்தணிக்கை செய்து தங்களுக்கு அறிக்கை அனுப்பி 16 மாதங்கள் ஆகிறது. ஆனாலும், பட்டா வழங்காமல் இருப்பது இந்திய தாய் திருநாட்டிற்காக தன் நலம் பாராது போர் முனையில் நின்று போராடியவர்களை உதாசீனப்படுத்துவது போல் உள்ளது. எனவே 3 தலைமுறைகளாக விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வரும் எங்களுக்கு அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவின் படி காலதாமதம் செய்யாமல் பட்டா வழங்க வேண்டும் என ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.