விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் : புதிய வடிவங்களில் சிலை தயாரிக்கப்படுவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர் :

பதிவு:2025-08-16 19:13:47



விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் : புதிய வடிவங்களில் சிலை தயாரிக்கப்படுவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர் :

விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு சிலைகள் தயாரித்து வர்ணம் பூசும் பணிகள் தீவிரம் : புதிய வடிவங்களில் சிலை தயாரிக்கப்படுவதாக சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர் :

திருவள்ளூர் ஆக 16 : நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் திருவள்ளூர் பகுதியில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..வரும் ஆகஸ்ட் 27-ல் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது இந்தப் பண்டிகையின் போது விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வதற்காக சிலைகள் தயாரிக்கும் பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குடும்பம், குடும்பமாக திருவள்ளூர் பகுதியில் தங்கி ஈடுபட்டு வருகின்றனர்.

அவர்கள் சென்னை, திருப்பதி சாலை, திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலை, கடம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இடத்தை வாடகைக்கு எடுத்து கூடாரம் அமைத்துத் தங்கி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசின் கெடுபிடிகளால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் நெகிழிக் கலப்பின்றி சிலைகளைத் தயாரிக்க வேண்டும். இதற்காக தண்ணீரில் எளிதில் கரையும் வகையிலான இயற்கை முறையிலான சாக்பீஸ் பவுடர் மற்றும் தேங்காய் நார்களை கொண்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. பக்தர்கள் விரும்பும் வகையில் ஒரு அடி முதல் 13 அடி வரை உயரம் கொண்ட சிலைகளை வழிபாடு செய்வதற்காக தயாரிக்கின்றனர்.

இதற்கான மூலப்பொருள்களான சாக்பீஸ் பவுடர், தேங்காய் நார், பல்வேறு வண்ணங்களில் வாட்டர் பெயிண்ட் ஆகியவற்றை சென்னை சௌகார்பேட்டை பகுதியில் இருந்து வாங்கி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர், கஜலிங்க விநாயகர், பாகுபலி விநாயகர் என 34 வகைகளில் புதிய வடிவங்களில் பிள்ளையார் சிலைகளை உருவாக்கி வருகின்றனர். ஒரு அடி முதல் 3 அடி வரை உயரம் கொண்ட 34 சிலைகளை ஒரு நபரால் உருவாக்க முடியும். இதற்கு நாள்தோறும் கூலியாக ரூ.700 வழங்கப்படுகிறது.

ஒரு அடி உயர விநாயகர் சிலையைத் தயாரிக்க ரூ.50 செலவாகிறது. அந்த சில ரூ.100-க் கு விற்பனை செய்யப்படும். 13 அடி உயர சிலையை செய்வதற்கு ரூ.10 ஆயிரம் வரை செலவாகிறது. அதை ரூ.18 ஆயிரத்திற்கு விற்பனை செய்வது வழக்கம். இந்நிலையில் விநாயகர் சிலைகள் தயாரித்து சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணியில் சிலை தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து விநாயகர் சிலை தயாரிப்பவர் கூறும் போது, இந்த விநாயகர் சிலை தயாரிக்கும் தொழிலில் கடந்த 30 ஆண்டுகளாக பாரம்பரியமாக ஈடுபட்டு வருவதாகவும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத மூலப்பொருள்களான தேங்காய் நார் ஒரு மூட்டை ரூ.400-க்கும், சாக்பீஸ் பவுடர் ரூ.350 முதல் ரூ.400 வரையிலும், பல்வேறு வண்ணங்களில் வாட்டர் பெயிண்ட் ஒரு லிட்டர் ரூ.300-க்கும் வாங்கி வந்து அதன் மூலம் விநாயகர் சிலைகளை தயாரித்து வருவதாகவும் தெரிவித்தனர். மேலும் வர்ணம் பூசும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கண்டிப்பாக இந்த சிலைகள் விற்பனையாகும் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.