கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில்79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்:

பதிவு:2025-08-16 20:28:25

கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில்79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்:

கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில்79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம்:

கடம்பத்தூர் ஆக,-15 திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெங்கத்தூர் ஊராட்சியில் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு குமரன் நகர் விநாயகர் கோவில் அருகில் கிராம சபை கூட்டம் தனி அலுவலர் / வட்டார வளர்ச்சி அலுவலர் அ.நடராஜன் உத்தரவு படி நடைபெற்றது

மேற்படி கூட்டம் ஊராட்சி செயலர் பபெருமாள் மற்றும் ஒன்றிய பற்றாளர் பா.பரந்தாமன் ஒன்றிய பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் A.S. சந்திரசேகர் தலைமையிலும் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தினேஷ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடேசன், யோகனாந்தம், கிராம பொது மக்கள் முன்னிலையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

கிராம சபை கூட்டத்தில் மக்கள் கோரிக்கையாக வெங்கத்தூர் மூகாம்பிகை நகர், பூங்கா அக்கிரமிப்பு அகற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் மற்றும்

வெங்கத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கருணாநிதி தெரு, அன்பழகன் தெரு, மா.பா சாரதி தெரு, வெங்கடேஸ்வரா நகர், மற்றும் குமரன் நகர் பகுதி விடுபட்ட சாலை வசதி, கால்வாய் வசதி செய்து தர வேண்டி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.