ஏரியில் மண் எடுப்பது குறித்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று விஏஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டதை திரும்பப்பெற வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் விஏஓக்கள் தர்ணா :

பதிவு:2025-09-10 11:20:39

திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் கொப்பூர் சித்தேரி எனும் ஏரியில் கொக்கோகோலா நிறுவனம் சார்பில் மண் எடுத்துள்ளனர்.இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது கலெக்டர் உத்தரவின் பேரிலேயே எடுப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து விஏஓ விசுவநாதன் கோகோ கோலா நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளார்.இந்நிலையில் விளக்கம் கேட்ட விஏஓ விஸ்வநாதனை மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அவரைப் பணியில் இருந்து விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

இதற்கான உத்தரவை திருவள்ளூர் வட்டாட்சியர் பாலாஜி விஏஓ விஸ்வநாதனிடம் வழங்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பணியிலிருந்து விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட விஏஓக்கள் திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தனியார் நிறுவனத்தாரிடம் கேள்வி கேட்டார் என்ற ஒரே காரணத்தால் ஒரு வி ஓ வை பணியில் இருந்து விடுவித்தது எந்த விதத்தில் நியாயம் என்றும், உடனடியாக அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்றும் விஏஓ.க்கள் தெரிவித்து தொடர்ந்து தன்ன போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பாக காணப்படுகிறது.