எல்லம்பேட்டை கிராமத்தில் உள்ள ஐடிஐ நிறுவனத்தில் உள்ள 20 டன் எடை கொண்ட பொருட்களை திருடியதாக பெண்களிடம் தகாத முறையில் பேசுவதாகவும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கிராம மக்கள் எஸ்பி இடம் புகார் :

பதிவு:2025-09-10 11:22:51

திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் எல்லம்பேட்டை கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பெருமாள் ஐ டி ஐ என்ற தனியார் நிறுவனமும் உள்ளது. அந்த நிறுவனத்தில் இருந்து லாரி என்ஜின், கார் எஞ்சின் உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 20 டன் எடை கொண்ட பொருட்களை அந்த நிறுவனத்தில் உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்து யாரோ மர்ம நபர்கள் திருடி விட்டதாக அதன் உரிமையாளர் பாபு என்பவர் அந்த கிராம மக்கள் மீது ஊத்துக்கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றும் பாஸ்கரன் என்பவர் இரவு நேரங்களில் விசாரணை என்ற பெயரில் தகாத வார்த்தைகளால் பேசுவதுடன் அத்து மீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்களையும் குழந்தைகளையும் வயதான பெண்களையும் இளைஞர்களையும் மிரட்டுவதாக கூறப்படுகிறது. ஐடிஐ உரிமையாளரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அப்பாவி ஏழை எளிய மக்களை மிரட்டி வருவதாகவும் பெண்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் எந்த ஆதாரமும் இல்லாமல் எப்படி எங்கள் வீட்டு ஆண்களை திருடர்கள் என சொல்லலாம் என பெண்கள் கேட்டதற்கு, மோப்பநாய் வரவழைத்து உங்களை கண்டுபிடிக்க வேண்டுமா என ஏளனமாக பேசுவதுடன், அவர்கள் ஆஜராகாவிட்டால் உங்களையும் கைது செய்வேன் என பெண்களிடமும் மிரட்டும் தொணியில் பேசுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் இன்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.