கடம்பத்துாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1.71 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார் :

பதிவு:2025-09-10 11:26:46



கடம்பத்துாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1.71 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார் :

கடம்பத்துாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1.71 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார் :

திருவள்ளூர் செப் 10 : கடம்பத்துாரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1.71 கோடி மோசடி குறித்து மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருவள்ளூர் அடுத்த கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லாத்துார் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் (50). காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் ஏலச்சீட்டு நடத்தி ரூ. 1.71 கோடி மோசடி குறித்து புகார் மனு அளித்துள்ளார்.

கடம்பத்துார் ஊராட்சி கசவநல்லத்துார் பகுதியில் வசித்து காய்கறி வியாபாரம் செய்து வரும் திவாகர் அதே பகுதியில் வசித்து வரும் கவிதா என்பவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பணம் செலுத்தி வந்துள்ளார். இதில் அவருக்கு தரவேண்டிய ரூ. 9 லட்சத்து 46 ஆயிரத்து 017 ரூபாயை தராமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார்.

இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த 28 பேரிடமும் ஏலச்சீட்டு பணம் வாங்கி மொத்தம் 1.71 கோடி ரூபாய் தராமல் ஏமாற்றி வந்துள்ளதாக எஸ்பி அலுவலகத்தில் கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தி ஏலச்சீட்டு தொகையை பெற்று தர வேண்டுமெனவும் ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் புகார் மனு அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட ஏ.டி.எஸ்.பி., ஹரிகுமார் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.