புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயக் கூலி தொழிலாளி மணி மின்சார ரயில் மோதி பலி :

பதிவு:2025-09-10 11:28:18

புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயக் கூலி தொழிலாளி மணி மின்சார ரயில் மோதி பலி :

புட்லூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயக் கூலி தொழிலாளி மணி மின்சார ரயில் மோதி பலி :

திருவள்ளூர் செப் 10 : திருவள்ளூர் அடுத்த புட்லூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணி (67) விவசாய கூலி தொழிலாளி. இவர் இன்று காலை வீட்டில் இருந்து வெளியே சென்றார். அப்போது புட்லூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்த புறநகர் மின்சார ரயில் இவர் மீது மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் ரயில்வே இருப்புப்பாதை சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.