திருவள்ளூரில் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கங்கினை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

பதிவு:2025-09-24 15:11:06



திருவள்ளூரில் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கங்கினை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூரில் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கங்கினை அமைச்சர் சா.மு.நாசர்  துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் அடுத்த மாணவளநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட அளவிலான அங்கக வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கங்கினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர்,திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகளும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

மேலும், வேளாண்மைக்கு தனி பட்ஜெட் வழங்கப்பட்ட முக்கியத்துவத்தையும், அங்கக வேளாண்மையை அதிகரிக்க வேளாண் துறை மூலம் முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற திட்டம் மூலம் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பசுந்தாள் உர பயிர்கள் விநியோகம், மண்புழு உர படுக்கைகள் விநியோகம், வேப்பங்கன்றுகள் விநியோகம், இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் மையம் அமைத்தல், அங்கக வேளாண்மைக்கான மாதிரி பண்ணைத்திடல் அமைத்தல், ஆடாதொடா, நொச்சி கன்றுகள் வழங்குதல் மேற்கண்ட முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்து பூச்சிமருந்துகளை குறைத்து ஆரோக்கியமாக உணவினை உற்பத்தி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையின் மூலம் 2 நபர்களுக்கு ரூ.5000 வீதம் தரச்சான்று ரூ.10000 கொடுக்கப்பட்டது. வேளாண்மைத் துறை மூலம் 2 தார்பாய் ரூ.2500 வீதம் ரூ.5,000 யும், திரவ உயிர் உரம் ஒரு நபருக்கு ரூ.450 மற்றும் ஆடாதொடா, நொச்சி ஒரு நபருக்கு ரூ.50 வழங்கப்பட்டது.தோட்டக்கலைத்துறை மூலம் விலையில்லா மூலிகை செடிகளை அமைச்சர் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குநர் என்.ஜெ.பால்ராஜ், வேளாண்மை துணை இயக்குநர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வே) க.வேதவல்லி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.இராஜேந்திரன் (திருவள்ளூர்), ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தமல்லி), எஸ்.சந்திரன் (திருத்தணி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.