திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,135 பேருக்கு ரூ.43,05,000 பரிசு தொகை வங்கியின் வரவு வைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

பதிவு:2025-09-24 15:13:52



திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,135 பேருக்கு ரூ.43,05,000 பரிசு தொகை வங்கியின் வரவு வைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூரில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற 2,135 பேருக்கு ரூ.43,05,000 பரிசு தொகை வங்கியின் வரவு வைத்து பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் : அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார் :

திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட அலுவலகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் 2025 - வெற்றி பெற்ற 2,135 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் பரிசு தொகையாக மொத்தம் ரூ.43,05,000 வங்கியின் வரவு வைத்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கி பேசினார்.

2025 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளின் துவக்க விழாவினை கடந்த 26.08.2025 அன்று துவக்கி வைக்கப்பட்டது. 26.08.2025 அன்று நடைபெற்ற தடகளம், இறகு பந்து மற்றும் சதுரங்கம் போட்டிகளில் 7000 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக இப்போட்டிகளுக்கு இணையதளம் வாயிலாக மொத்த பதிவு செய்த விளையாட்டு வீரர் வீராங்கனைகளின் எண்ணிக்கை. 1,04,556 ஆகும். மேலும் 5 பிரிவுகளில் பள்ளிப் பிரிவு சார்பாக 28,971 என்ற எண்ணிக்கையிலும், கல்லூரி பிரிவு சார்பாக 13,469 என்ற எண்ணிக்கையிலும், பொதுப் பிரிவு சார்பாக 3,505 என்ற எண்ணிக்கையிலும், அரசு பிரிவு சார்பாக 1,503 என்ற எண்ணிக்கையிலும் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவு சார்பாக 412 என்ற எண்ணிக்கையிலும் ஆக மொத்தம் 47,860 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

இந்த மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பையில் 57 வகையான விளையாட்டு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 2,135 விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பரிசு தொகையாக மொத்தம் ரூ.43,05,000 வங்கியில் வரவு வைக்கப்பட்டது. இப்போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்ற 2,135 வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிகளுக்கு மொத்தம் 660 வீரர் வீராங்கனைகள் வருகின்ற 02.10.2025 அன்று முதல் 14.10.2025 வரை பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்கள். இதில் தனிநபர் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக ரூ.1,00,000, 75,000 மற்றும் 50,000 வழங்கப்பட இருக்கின்றன. குழுப் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெரும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகையாக ரூ.75,000,50,000 மற்றும் 25,000 வழங்கப்படவுள்ளது என அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்) டி.ஜெ.கோவிந்தராஜ் (கும்மிடிப்பூண்டி), திருவள்ளூர் நகர்மன்ற தலைவர் பா.உதயமலர் பாண்டியன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) ம.மோகனா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வி.சேதுராஜன், திரளான விளையாட்டு வீரர் வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.