பதிவு:2025-09-24 15:17:59
திருவள்ளூர் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி :
திருவள்ளூர் செப் 24 : திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர் அடுத்த பெரியமஞ்சங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன் மகன் ஜெயபால் (26).இவர் இருசக்கர வாகனத்தில் பட்டரைப் பெரும்புதூரில் இருந்து மஞ்சங்குப்பம் கிராமம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பட்டரைப் பெரும்புதூர் பாலம் அருகே திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்த டிஎன் 20 டி எக்ஸ் 4078 என்ற லாரி இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது.இதில் பலத்த காயமடைந்த ஜெயபால் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, லாரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.