பதிவு:2025-09-25 12:00:07
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளேரிதாங்கல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பி.எம்.ஜென்மன் திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 24 வீடுகளின் கட்டுமான பணிகளையும், தொடுக்காடு ஊராட்சியில் பழங்குடியினர்களுக்கு ரூ.3.15 கோடி மதிப்பீட்டில் 72 வீடுகளின் கட்டிட கட்டுமான பணிகளையும் மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு நிதி (சிஎஸ்ஆர்) திட்டத்தில் 48 வீடுகளின் கட்டிட கட்டுமான பணிகளையும், மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக வெங்கத்தூர் ஊராட்சியில் திருவள்ளூர் அரசு ஊழியர் கூட்டுறவு பண்டக சாலையின் கீழ் செயல்படும் ஸ்ரீபெரும்புதூர் மணவாள நகர் நியாய விலை கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
இதில் ஊரக வளர்ச்சி துறை உதவி பொறியாளர் அருள், வட்டார வளர்ச்சி அலுவலர் சௌந்தரி (வ.ஊ) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.