திருவள்ளூரில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் நாவல் மரக்கன்றுகளை நடும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் :

பதிவு:2025-09-25 12:04:22



திருவள்ளூரில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் நாவல் மரக்கன்றுகளை நடும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூரில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு 10 ஆயிரம் நாவல் மரக்கன்றுகளை நடும் பணிகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார் :

திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு நாவல் மரத்தை கொண்டாடும் வகையில் 10 ஆயிரம் நாவல் மரக்கன்றுகள் நடும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நாவல் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பசுமை தமிழ்நாடு இயக்க நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட வன அலுவலர் வ.சுப்பையா மற்றும் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி முதல்வர் ஜே.ரேவதி, ஆகியோர் முன்னிலையில் திருவள்ளூர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் நாள் விழாவை முன்னிட்டு நாவல் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் மருத்துவ கல்லூரி மாணவர்கள், வனத்துறை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வனப்பகுதி மற்றும் வருவாய் நிலங்களில் சுமார் 10 ஆயிரம் நாவல் செடிகள் நடப்பட்டு வருகின்றது. இன்னும் இம்மாவட்டத்தை பசுமையாக்க சுமார் 10 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்று பசுமை தமிழ்நாடு இயக்க நாளன்று நாவல் மரங்கள் நடப்பட்டு முதல் மரம் நடும் திருவிழா தொடங்கப்பட்டது. வனத்துறை சார்பில் பள்ளிகளில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டி கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் இணை இயக்குநருமான வை. ஜெயக்குமார், மாவட்ட உதவி பாதுகாப்பு அலுவலர் ராதை, அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி முதல்வர் ரேவதி, துணை முதல்வர் திலகவதி, மருத்துவ கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு, உதவி நிலைய மருத்துவ அலுவலர் பிரபுசங்கர், 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.