திருவள்ளூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

பதிவு:2025-09-25 12:06:14



திருவள்ளூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :

திருவள்ளூர் செப் 25 : தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை உயர்த்திட வேண்டும், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும், உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மூன்று கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது

அதன்படி திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தனசேகர் மாநில செயற்குழு உறுப்பினர் முத்து மக்கள் நல பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தயாளன் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தூய்மை காவலர்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குநர்களுக்கு மாதாந்திர ஊதியத்தை உயர்த்திட வேண்டும், மக்கள் நல பணியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் உள்பட 16 அம்ச கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.