திருவள்ளூர் அடுத்த தொடுகாடு பகுதியில் 50 ஆண்டுகளாக வாழும் 100-க்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா வழங்காததை கண்டித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதம் :

பதிவு:2025-09-25 12:08:08

திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்டம் தொடுகாடு பகுதியில் சுமார் 40 குடும்பத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் 50 ஆண்டுகளாக அப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் தங்களுக்கு வீட்டு மனை பட்டா வேண்டும் என வட்டாட்சியர், ஆர்டிஓ., டிஆர்ஓ.,கலெக்டர் உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது .

இந்த நிலையில் தாங்கள் வசிக்கும் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தனி நபர் ஆக்கிரமித்து இருப்பதால் அந்த இடத்தை காலி செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், சம்பந்தப்பட்ட தனி நபர் தங்களை மிரட்டுகின்றனர். அது அரசு புறம்போக்கு நிலம் எனவும், அதற்கான ஆதாரங்கள் அரசு கோப்புகளிலேயே உள்ளதாகவும் அதை ஆய்வு செய்து அப்பகுதியில் வாழ்ந்து கொண்டிருக்கும் 40 குடும்பங்களுக்கு உடனடியாக பட்டா வழங்கக் கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதையடுத்து முக்கிய நிர்வாகிகளை வட்டாட்சியர் பாலாஜி அழைத்து இதுகுறித்து கலெக்டரிடம் பேசி அதற்கான முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்ததை அடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் தங்கள் பகுதிக்கு உடனடியாக பட்டா வழங்காவிட்டால் போராட்டங்கள் தொடரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.