திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் திருமணமான 20 நாளில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை :

பதிவு:2025-09-25 12:11:44



திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் திருமணமான 20 நாளில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை :

திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டையில் திருமணமான 20 நாளில் மணமகன் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை :

திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் அடுத்த செவ்வாப்பேட்டை சி.டி.எச் ரோடு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (37). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.இவருக்கும் உறவுக்கார பெண்ணான ஜெயஸ்ரீ (25) எல்லோருக்கும் கடந்த 4.9.2025 அன்று திருமணம் நடந்துள்ளது.இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து மனைவி ஜெயஸ்ரீயை ஒரு அறையில் அடைத்து பூட்டிவிட்டு கார்த்திகேயன் வேறொரு அறையில் இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் மனைவி தனி அறையில் அடைத்து விட்டதால் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் பிரவீன் குமார் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஜெயஸ்ரீயை அடைத்து வைத்திருந்த அறையை திறந்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து மற்றொரு அறையில் உள்பக்கமாக தாழிட்டு கொண்டிருந்ததால் கதவை தட்டிப் பார்த்தும் திறக்காததால் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 20 நாட்களே ஆனநிலையில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.