திருவள்ளூர் மாவட்டத்தில் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது கைப்பற்றப்பட்ட 51 வாகனங்கள் ஏலம் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-09-25 12:13:18

திருவள்ளூர் செப் 25 : திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின் போது பொது விநியோகத் திட்ட பொருட்களுடன் கூடிய வாகனங்கள் கைப்பற்றுகை செய்யப்பட்டு திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்தில் 6A விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

மேற்கண்ட வழக்குகளில் கைப்பற்றுகை செய்யப்பட்ட 51 வாகனங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு குடிமைப் பொருட்களை கள்ளச்சந்தையில் விற்பதற்கு கடத்தி சென்ற குற்றத்திற்காக அபராதம் விதித்து ஆணையிடப்பட்டுள்ளது.

வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வாகன உரிமையாளர்கள் இதுவரை செலுத்தி வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை. மேலும் இந்த வாகனங்களுக்கு இது நாள் வரை யாரும் உரிமை கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை.

எனவே வாகனங்களை உரிமை கோரப்படாத வாகனங்களாக கருதி அரசுக்கு ஆதாயம் செய்து அவற்றை நேரடி பொது ஏலத்தில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே வாகனங்களை ஏலம் கோர விரும்புவோர்கள் 07.10.2025 அன்று திருவள்ளூர் அருகே காவல் ஆய்வாளர், குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை அலுவலகம், (ஸ்ரீ நிகேதன் பள்ளி அருகில்), பூங்கா நகர் என்ற முகவரியில் நடைபெறும் பொது ஏலத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.