தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சலுகைகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

பதிவு:2025-09-25 12:14:38



தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சலுகைகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சியின் சலுகைகள் : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :

திருவள்ளூர் செப் 25 : மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 29A –ன்கீழ் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி வருமான வரிவிலக்கு (பிரிவு 13A வருமான வரி சட்டம்).அங்கீகாரம் (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 6).பொது தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை (தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீடு பத்தி 108).அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள்.நட்சத்திர பிரச்சாரங்கள் நியமனம் ஆகிய சலுகைகளை பெறுகிறது.

மேற்படி சலுகைகளைப் பெரும், பதிவு செய்யப்பட்ட கட்சியானது அரசியல் கட்சிகள் பதிவு செய்வதற்கான வழிக்காட்டுதல்களில் பத்தி 3(XIX) ன் படி பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியானது அக்கட்சிக்கான சட்ட திட்டத்தில் ஆண்டு கணக்காய்வு அறிக்கையை தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என குறிக்கப்பட வேண்டும் இந்த வழிக் காட்டுதல்கள் தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 324 கீழ் வெளியிடப்பட்டவை. ஆகையால் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இது கட்டாயமாகும். திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலர் வரம்பிற்கு உட்பட்ட முகவரியில் உள்ள கீழ்கண்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அகில இந்திய வள்ளலார் பேரவை, எண் 43, பிள்ளையார் கோயில் தெரு, வீரராகவபுரம், சென்னை 600 077.புரட்சி பாரதம், எண் 54, தேசிய நெடுஞ்சாலை, பூந்தமல்லி, சென்னை 600 056.தமிழ்நாடு இளைஞர் கட்சி, எண் 23, கணேஷ் அவெனியு, சக்தி நகர், போரூர், சென்னை 600 116. தி ப்யூச்சர் இந்தியா கட்சி, எண்.2/191B, நேதாஜி தெரு, எலைட் பள்ளி எதிர்புரம், M.A. நகர், செங்குன்றம்,சென்னை 600 052.

மேற்படி பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகள் கடந்த மூன்று நிதி ஆண்டுகளுக்கான (2021-22, 2022-23, 2023-24) வருடாந்திர தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கவில்லை என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு காரணம் கேட்கும் குறிப்பாணை அனுப்பி, விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்க தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் அவர்களை நியமனம் செய்துள்ளது.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள கட்சிகளுக்கு சென்னை தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு செயலர் அவர்களின் கடிதம் எண் 7920/2025-1 பொது (தேர்தல் IV) துறை நாள் 19.09.2025-ன்படி தங்கள் கட்சியின் பதிவினை ஏன் ரத்து செய்யக் கூடாது என்பதற்கான காரணத்தினை தலைமை தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் பின்வரும் தேதி அன்று நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தினை எழுத்து பூர்வமாக அளிக்க காரணம் கேட்கும் குறிப்பானை சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு சார்வு செய்யப்பட்டுள்ளது. அகில இந்திய வள்ளலார் பேரவை 07.10.2025 –காலை 11,புரட்சி பாரதம் 09.10.2025-மதியம் 12.30, தமிழ்நாடு இளைஞர் கட்சி 09.10.2025-மாலை 4,தி ப்யூச்சர் இந்தியா கட்சி 10.10.2025-மதியம் 12 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.