திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : 13 பேருக்கு பட்டா மற்றும் 10 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கல்

பதிவு:2022-06-15 15:56:42



திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : 13 பேருக்கு பட்டா மற்றும் 10 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கல்

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி : 13 பேருக்கு பட்டா மற்றும் 10 பேருக்கு முதியோர் உதவித் தொகைக்கான ஆணைகள் வழங்கல்

திருவள்ளூர் ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் கடந்த 7-ஆம் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது இந்த ஜமாபந்தியில் திருவள்ளூர் வட்டத்துக்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, குடும்ப அட்டை, ஜாதி சான்றிதழ் ஆகியவற்றை கேட்டு பொதுமக்கள் மனுக்களை அளித்து வருகின்றனர்

அதன்படி திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐந்தாம் நாளான கோடுவெளி, சிங்கிலிகுப்பம்,ஆயல்சேரி, புதுகுப்பம், மாகரல், குருவாயல், ஆர்க்கம்பட்டு, காரணை (42), அம்மணம்பாக்கம் அகரம்(34) செம்பேடு வெங்கல்-ஏ, வெங்கல்- பி என 15 கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.

இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரும் (தேர்தல் பிரிவு) மற்றும் ஜமாபந்தி அலுவலருமான முரளி மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், தனி வட்டாட்சியர் பாண்டியராஜன் துணை வட்டாட்சியர் சரஸ்வதி, தலைமை நில அளவையர் செந்தில் மற்றும் மகிதா வருவாய் ஆய்வாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்று மனுக்களை பெற்றனர்.கடந்த 7-ந் தேதி முதல் நேற்று வரை 726 மனுக்கள் பெறப்பட்டு அதில் உடனடியாக தீர்வு காணப்பட்டதின் அடிப்படையில் 13 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும்,10 பேருக்கு முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

வீட்டுமனைப்பட்டா போன்ற சான்றிதழ்கள் கேட்டு விண்ணப்பித்தால் மாதக் கணக்கில் அலைய வேண்டிய நிலை மாறி தற்போது விண்ணப்பித்த உடனே பரிசீலனை செய்து பட்டா வழங்கியதற்கும், முதியோர் உதவித்தொகை வழங்க ஆணை பிறப்பித்ததற்கும் பொது மக்கள் தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை அரசுக்கு தெரிவித்தனர்.