ஆலப்பாக்கம் பகுதியில் தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

பதிவு:2022-06-15 15:58:24



ஆலப்பாக்கம் பகுதியில் தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

ஆலப்பாக்கம் பகுதியில் தச்சூர் முதல் சித்தூர் வரையிலான 6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர் ஜூன் 15 : திருவள்ளூர் மாவட்டம் தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரையிலான 126 கிலோ மீட்டர் தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.3,200 கோடியில் 6 வழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.இதற்காக தச்சூர் முதல் சித்தூர் வரை நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஊத்துக்கோட்டை அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் இன்று சாலை அமைக்கும் பணிக்காக ஜேசிபி இயந்திரம் மூலம் விளைநிலங்களை சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அந்த பணிகளை நிறுத்தக்கோரி விவசாய நிலங்களில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் ஜேசிபி இயந்திரத்தை முற்றுகையிட்டு பணிகளை நிறுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினர் அவர்களுடன் பேசி பணிகளை நிறுத்தினர்.

இதனால் ஜேசிபி இயந்திரம் திருப்பி அனுப்பப்பட்டது. தற்காலிகமாக இந்த போராட்டம் கைவிடப்பட்டது. எனினும் இந்த திட்டத்தை செயல்படுத்த 3 போகங்கள் விளையும் விளைநிலங்கள் வழியாக சாலை அமைக்கும் பணிகள் செல்லாமல் மாற்றுப்பாதையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுக்கும் ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.