திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்வி நிறுவன வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு

பதிவு:2022-06-17 12:31:18



திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்வி நிறுவன வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு

திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்வி நிறுவன வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் ஆய்வு

திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக மைதானத்தில் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு வட்டத்திற்குட்பட்ட அனைத்து கல்வி நிறுவன வாகனங்களையும், சிறப்பு கூட்டு தணிக்கைக்குட்படுத்தி மாவட்ட அளவிலான துறைகளுக்கிடையேயான குழுவினர் கல்வி நிறுவன வாகனங்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண் முன்னிலையில் ஆய்வு செய்து பேசினார்.

ஒவ்வொரு வருடமும் அனைத்து பள்ளி வாகனங்களை ஒருங்கிணைந்து சிறப்பு குழு மூலம் கூட்டு ஆய்வு செய்யப்பட்டு அனைத்து பள்ளி வாகனமும் 16 சரத்துகளுக்கு உட்பட்டு சரியான நிலையில் தான் உள்ளதா அல்லது ஏதேனும் குறைகள் உள்ளதா, அந்த குறைகள் இருந்தால் அது சீர் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்வது வழக்கமான ஒரு விஷயமாகும். அந்த வகையில் தற்போது திருவள்ளூர் வருவாய் மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளி வாகனங்களோடு கூட்டாய்வு நடைபெறவுள்ளது. இந்த ஆய்வில் அரசு பரிந்துரைக்கும் வகையில் பேருந்துகளில் அவசர வழி அமைக்கப்பட்டுள்ளதா, தீயணைப்பு கருவி உள்ளதா, முதலுதவி பெட்டி உள்ளதா, வேகக்கட்டுப்பாட்டு கருவி சரியாக இயங்குகிறதா உள்ளிட்ட 16 வகையான வழிகாட்டு நெறிமுறைகளும் முறையாக சரியான முறையில் இயங்குகிறதா என்பதையும்; உறுதி செய்த பிறகே வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.

இங்கு உள்ள பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்ற ஓட்டுநர்களை விட கவனமாகவும், ஜாக்கிரதையாகவும் உங்கள் வாகனங்களை இயக்க வேண்டிய கடமை உங்களிடம் உள்ளது. மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள அனைத்து விபத்து நடக்கும் இடங்களில் வேக தடை அமைப்பது, சாலைகளில் வண்ணம் தீட்டுவது, பதாகை வைப்பது போன்ற நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சி துறை, வட்டார போக்குவரத்துறை ஆகிய துறைகள் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஓட்டுநர்களின் சாதுரியத்தாலும் விபத்துக்களை குறைக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைபிடிப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளையும் வழங்கி, வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேடுகளையும் வழங்கினார்.தொடர்ந்து, வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களுக்கான அமைக்கப்பட்ட சிறப்பு கண் மருத்துவ முகாமையும், வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினரால் செய்து காண்பிக்கப்பட்ட தீயணைப்பு மற்றும் தீ விபத்திலிருந்து பாதுகாப்பது குறித்த செய்முறை விளக்கத்தையும் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

இதில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜேசுராஜ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ரமேஷ், திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் சு.மோகன், பேரம்பாக்கம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலைய அலுவலர் எம்.வீரராகவன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கே.பன்னீர்செல்வம், ஜி.மோகன், பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.