அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி

பதிவு:2022-06-17 12:33:53



திருவள்ளூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி : வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப் போட்டி

திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளினை முன்னிட்டு பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கிடயே பேச்சுப் போட்டி 19.04.2022 அன்று முற்பகல் 10 மணியளவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டியில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5000, புழல் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த த.கீர்த்திகாவும், இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3000, புன்னப்பாக்கம். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த லி.வினோத்குமாரும், மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2000, காக்களூர் சி.சி.சி.மெட்ரிக் மேனிலைப் பள்ளியை சேர்ந்த சா.ஷெக்கினாஷேரன் மேரியும் பெற்றுள்ளனர். மேலும், அரசுப் பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பரிசாக தொகை ரூ.2000, கொமக்கம்பேடு, அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த இர.கோபிகா, பழைய அலமாதி, அரசு உயர்நிலைப் பள்ளியை சேர்ந்த .ப.ராதிகா பெற்றனர்.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் முதல் பரிசுத்தொகை ரூ.5000, பட்டாபிராம் தருமமூர்த்தி இராவ் பகதூர் கலவல கண்ணன் செட்டி இந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த வை.ராகவி, இரண்டாம் பரிசுத்தொகை ரூ.3000, பட்டாபிராம் ஆலிம் முகமது சாலிக் பொறியியல் கல்லூரியை சேர்ந்த ர.பிரியதர்ஷினியும், மூன்றாம் பரிசுத்தொகை ரூ.2000,வேப்பம்பட்டு, ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மு.மஞ்சுளா பெற்றனர். இந்நிலையில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதகளை வழங்கினார்.