பதிவு:2022-06-17 12:36:11
அதிமுகவுக்கு ஒற்றை தலைமை இருக்க வேண்டும், நான்கரை ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி செய்து, கட்சியை வலுப்படுத்திய இபிஎஸ் தான் பதிவியேற்க வேண்டும் என முன்னாள் எம்பி கோ.ஹரி பரபரப்பு பேட்டி
திருவள்ளூர் ஜூன் 17 : தமிழகத்தில் அதிமுகவிற்கு ஒற்றை தலைமை வேண்டும் என தற்போது பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் எம்பியும் அதிமுக அமைப்புச் செயலாளருமான திருத்தணி கோரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆட்சி பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி திறம்பட ஆட்சி புரிந்ததுடன். அதிமுகவையும் நல்ல முறையில் வழிநடத்தி சென்றதால் எடப்பாடி பழனிசாமி தலைமையே சிறந்தது என்றும். ஓபிஎஸ் அவர்களால் அனுகூலம் பெற்றவர்கள் அவருக்கு ஆதரவாக இருக்கலாமே தவிர ஈபிஎஸ் மட்டுமே அதிமுகவுக்கு தலைமையேற்க தகுதியானவர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் இரட்டை தலைமை வேண்டும் என்று தெரிவித்திருப்பது அவரது சொந்த கருத்து என்றும் அதிமுக அடிமட்ட தொண்டர்கள் முதல் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என்றும் அப்போது தான் அதிமுகவை வலுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்து வருவதால் இபிஎஸ் தலைமையில் கட்சி செயல்படும் ஆனால் இனிவரும் காலத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமையும் எனவும் திருத்தணி கோ.ஹரி தெரிவித்தார்.