பதிவு:2022-06-17 12:43:22
திருவள்ளூரில் சோதனை செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளிப் பேருந்தில் நல்ல பாம்பு புகுந்ததால் பரபரப்பு : வாகனத்தின் இஞ்சினில் மாட்டி தீயணைப்பு துறையினரால் இறந்த நிலையில் மீட்பு
திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளையாட்டு மைதானத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் 235 வாகனங்களை சோதனை செய்ய நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெகர்லா சேபஸ் கல்யாணம் ஆகியோர் சுமார் 50க்கும் மேற்பட்ட வாகனங்களின். வாகனங்களில் உரிமங்கள். ஓட்டுனர் உரிமங்கள். ஆவணங்கள், வாகனங்களில் உள்ள பாதுகாப்பு வசதிகள். முதலுதவி ஏற்பாடுகள் உள்ளிட்ட அரசின் 16 அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அதைத்தொடர்ந்து மாவட்ட போக்குவரத்து ஆய்வாளர் அவர்களையும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் முழுவதுமாக சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க கோரி சென்றபின் சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தில் நல்ல பாம்பு புகுந்துள்ளதை கண்ட வாகன ஓட்டிகள் அந்த வாகனத்தின் அருகிலிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர் இதையடுத்து அங்கு இருந்த தீயணைப்பு துறையினர் அரை மணிநேரமாக பாம்பை உயிருடன் மீட்க போராடிய நிலையில் இன்ஜினுக்குள் புகுந்து கொண்டு பிடிக்க முடியாமல் திணறினர்.
இதையடுத்து வாகனத்தை இயக்கி பிடிக்க நினைத்த போது இன்ஜினின் அடிபட்டு நல்ல பாம்பு துடிதுடித்து இறந்தது. சோதனைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளி வாகனத்தில் நல்ல பாம்பு புகுந்துகொண்டு அடிபட்டு இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.