பதிவு:2022-06-17 12:46:09
திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 12 டன் ரேசன் அரிசி பறிமுதல் : லாரியை பறிமுதல் செய்து கடத்திலில் ஈடுபட்டவர் கைது
திருவள்ளூர் ஜூன் 1 : திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேசன் அரிசி கடத்துவதாக தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் தடுப்பு குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைடுத்து சோழவரம் அடுத்த காரணோடை சோதனைச் சாவடியில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் தடுப்பு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் தலைமையில் காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் ஏழை எளிய மக்களுக்காக வழங்கப்படும் ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணையில் செங்குன்றம் திருப்பதி நகரைச் சேர்ந்த வி.ராமச்சந்திரன் என்பதும் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு 12 டன் ரேசன் அரிசி கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து கடத்தலில் ஈடுபட்ட ராமச்சந்திரனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும்,12 டன் ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.