திருவள்ளூர் ‌அடுத்த கூடப்பாக்கத்தில் பப்ஜி விளையாட்டில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் : இருதரப்பிலும் 2 பேருக்கு பலத்த காயம் : 4 பேரை கைது செய்து விசாரணை

பதிவு:2022-06-17 12:55:25



திருவள்ளூர் ‌அடுத்த கூடப்பாக்கத்தில் பப்ஜி விளையாட்டில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் : இருதரப்பிலும் 2 பேருக்கு பலத்த காயம் : 4 பேரை கைது செய்து விசாரணை

திருவள்ளூர் ‌அடுத்த கூடப்பாக்கத்தில் பப்ஜி விளையாட்டில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதல் : இருதரப்பிலும் 2 பேருக்கு பலத்த காயம் :  4 பேரை கைது செய்து விசாரணை

திருவள்ளூர் ஜூன் 17 : திருவள்ளூர் ‌அடுத்த கூடப்பாக்கத்தில் பப்ஜி விளையாட்டில் இருதரப்பு இளைஞர்களிடையே மோதலால் இருதரப்பிலும் 2 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. 2பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இருதரப்பு புகாரின்பேரில் 4 பேரை கைது செய்து காவல் துறையினர் விசாரணை‌ நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடப்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சீனிவாசன் மகன் சசிகுமார் (25) என்ற இளைஞனும் அதே பகுதியை சேர்ந்த சேகர் மகன்கள் அஜித் (23). மணிமாறன் (28) செல்வம் (32) ஆகிய 3 பேரில் அஜித் என்னவன் மட்டும் செல்போனில் சசிகுமாருடன் பப்ஜி விளையாட்டை விளையாடி உள்ளனர்.

அப்போது சசிகுமாருக்கும் அஜித்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அஜித்தின் சகோதரர்களான செல்வம் மற்றும் மணிமாறன் ஆகியோர் சசிகுமாரை விளா எலும்பில் கத்தியால் குத்தி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்ததையடுத்து சசிக்குமாரின் ஆதரவாளர்களான விநாயகமூர்த்தியின் மகன் விஜயகுமார், பீட்டர் மகன் சாமுவேல் மாங்காளி மகன் அபிலேஷ் ஆகியோர் அஜித்தை முகத்தில் தாக்கியதில் கண் அருகே பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகுமார் மற்றும் அஜித் ஆகிய 2 பேரும் திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சசிகுமார் தரப்பில் அவரின் பெரியம்மா லோகு என்பவரும் அஜித் சார்பில் அவரது தாய் தேவகி ஆகியோர் வெள்ளவேடு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அஜித்தின் சகோதரர் செல்வம் மற்றும் சசிகுமாரின் ஆதரவாளர்களான விஜயகுமார் சாமுவேல் மற்றும் அபிலேஷ் என நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.செல்போன் விளையாட்டில் பப்ஜி கேம் விளையாடும் போது இளைஞர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் 2 பேர் பலத்த காயமடைந்த நிலையில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கூடப்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.