பதிவு:2022-06-21 11:03:28
திருவள்ளூர் அடுத்த ஈக்காடு பகுதியில் இணைப்புக் கால்வாயில் குளிக்கச் சென்ற இளைஞர் நீரில் மூழ்கி பலி : தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்
திருவள்ளூர் ஜூன் 21 : சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு இணைப்புக் கால்வாய் மூலம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த ஈக்காடு டிரான்ஸ்போர்ட் நகர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவரின் ஹரிஷ் என்கிற 24 வயது இளைஞர் அங்கு உள்ள இணைப்புக் கால்வாயில் நண்பர்கள் மற்றும் சகோதரனுடன் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது திடீரென ஹரீஷ் நீரில் அடித்துச் செல்லப்பட்டான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து இணைப்புக் கால்வாய் மூலம் நீர் சென்று கொண்டிருப்பதால் ஹரிஷ் உடல் அடித்துச் செல்லப்பட்டது.
தகவலறிந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் அடித்து செல்லப்பட்ட ஹரீஷ் உடலை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து புல்லரம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.