திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

பதிவு:2022-06-21 11:06:03



திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழையால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்வு : பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது

அதன்படி கும்மிடிப்பூண்டியில் 53 மில்லி மீட்டர் மழையும், பள்ளிப்பட்டில் 9 மில்லி மீட்டர் மழையும், ஆர்கே பேட்டையில் 49 மில்லி மீட்டர் மழையும், சோழவரத்தில் 47 மில்லி மீட்டர் மழையும். பொன்னேரியில் 51 மில்லி மீட்டர் மழையும் செங்குன்றத்தில் 37 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.அதேபோல் ஜமீன் கொரட்டூரில் 110 மில்லி மீட்டர் மழையும், பூந்தமல்லியில் 92 மில்லி மீட்டர் மழையும், திருத்தணியில் 62 மில்லி மீட்டர் மழையும். திருவாலங்காட்டில் 76 மில்லி மீட்டர் மழையும், பூண்டியில் 46 மில்லி மீட்டர் மழையும், தாமரை பக்கத்தில் 14 மில்லி மீட்டர் மழையும் திருவள்ளூரில் 55 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது

அதேபோல் ஊத்துக்கோட்டையில் 80 மில்லி மீட்டர் மழையும், ஆவடியில் 59 மில்லி மீட்டர் மழையும் என ஆக மொத்தம் 840 மில்லி மீட்டர் மழை பதிவாகி சராசரியாக திருவள்ளூர் மாவட்டத்தில் ஐம்பத்தி ஆறு மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது.

இதனால் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியில் இன்றைய நிலவரப்படி 947 மில்லியன் கன அடி நீர் இருப்பும் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து 550 கன அடி நீரும் மழையின் காரணமாக 280 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 621 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.புழல் ஏரியில் இன்றைய நிலவரப்படி மொத்த கொள்ளளவு 3300 மில்லியன் கன அடியில் தற்போது 3048 மில்லியன் கன அடி நீர் உள்ளது நீர்வரத்து 270 கன அடி‌யாகவும் சென்னை மக்களுக்காக 703 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1081 மில்லியன் கன அடியில் 132 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது நீர்வரத்து ஆக 26 கன‌அடி வந்து கொண்டிருக்கிறது.செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் இப்போது 3475 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதில் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வரும் நீர் மழை நீர் என 1,700 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக 205 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.அதேபோல் கண்ணன் கோட்டையில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில் தற்போது 430 மில்லியன் கன அடி நீர் இருப்பு என நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.