பதிவு:2022-06-21 11:11:06
திருத்தணி முருகன் கோவிலில் பணம் இருந்தால் ராஜமரியாதையுடன் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பதால் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் சாமானிய பக்தர்கள் குமுறல்
திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படைவீடாக சிறந்து விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இக்கோவிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் திருத்தணி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொது வழியாக மற்றும் பக்தர்கள் வசதிக்காக 150 ரூபாய் சிறப்பு தரிசன கட்டணம் வழியாக நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கோயில் ஊழியர்கள் ஒருசில பக்தர்களை விஐபி என்று சிறப்பு கட்டணம் வழியாக அழைத்துச் சென்று மூலவர் சன்னதியில் ராஜமரியாதையுடன் சாமி தரிசனம் செய்யப் அனுமதிக்கப்படுவதால் பொது வழியில் வரும் சாமானிய பக்தர்கள் நீண்ட நேரமாக காத்திருந்து சாமி தரிசனம் செய்யப்படுவதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
எனவே சிறப்பு தரிசன கட்டணம் வழியாக ஒருசில பக்தர்கள அழைத்துச் சென்று ராஜமரியாதையுடன் மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கும் ஊழியர்கள் மீது இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாமானிய பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.