திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சாரம்

பதிவு:2022-06-22 13:06:14

திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் 4.50 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் திவ்யா தலைமையில் இந்த பிரச்சாரம் துவங்கியது. இந்த பிரச்சாரத்தின்போது மாவட்டச் செயலாளர் இரா.பாண்டுரங்கன் விளக்க உரையாற்றினார். தமிழகத்தில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு, தென் சென்னை, வட சென்னை என 7 மாவட்டங்களில் இருந்து இந்த பிரச்சாரம் மேற்கொள்ள மாநில நிர்வாகம் சார்பில் இந்த பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரச்சாரத்தின் போது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்கிட வேண்டும் என்றும், தற்போது காலியாக உள்ள நான்கரை லட்சம் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். மேலும் தற்போது அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்திய பணியாளர்களை நியமித்திட வேண்டும். 90 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பதால் வேலைப் பளுவை குறைக்க காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் பிரச்சாரத்தின் போது வலியுறுத்தப்பட்டது. அதே போல் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், கிராமப் புற நூலகர்கள், கிராம உதவியாளர்கள், எம்.ஆர்.பி செவிலியர்கள், என மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கால முறை ஊதியத்தில் பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த பிரச்சாரத்தின் போது வலியுறுத்தினர்.