பதிவு:2022-06-22 23:48:20
நடிகர் விஜயின் 48வது பிறந்த நாள் விழா திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் கோலாகல கொண்டாட்டம்
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைமை சார்பாக தளபதி விஜயின் நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு தலைமை அலுவலகத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் ஆர்.குட்டி தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் அன்னதானம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் முதியோர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. இதில் திருவள்ளூர் தொகுதி மற்றும் பூந்தமல்லி தொகுதி நகரம் ஒன்றியம் இளைஞர் அணி மாணவர் அணி தொண்டர் அணி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள். விஜயின் ரசிகர் பட்டாளங்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி தளபதி விஜய் வாழ்க வாழ்க என முழக்கமிட்டு நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.