தண்டுரை சேக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

பதிவு:2022-06-27 12:33:30



தண்டுரை சேக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

தண்டுரை சேக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில்  கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் :  பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் ஜூன் 28 : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி தண்டுரை சேக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பாக நடைபெற்ற கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார்.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் புதுப்பொலிவுடன் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து 385 வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்திற்கு மூன்று மருத்துவ முகாம்கள் வீதம் 385 வட்டாரங்களிலும் மொத்தம் ஒரு வருடத்திற்கு 1155 முகாம்களும் நகர் புறங்களில் ஒரு மாநகராட்சிக்கு நான்கு முகாம் வீதம் ஒரு வருடத்திற்கு 80 முகாம்களும் சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சேக்காடு தண்டுரை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு மருத்துவ சேவைகளான பொது மருத்துவம் இருதய நோய் மருத்துவம் பொது அறுவை சிகிச்சை மருத்துவம் சிறுநீரகம் மருத்துவம் குடல் நோய் மருத்துவம் நரம்பியல் மருத்துவம் குழந்தைகள் நல மருத்துவம் சித்த மருத்துவம் மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம் மனநல மருத்துவம் கண் மருத்துவம் காது மூக்கு - தொண்டை மருத்துவம் எலும்பு மற்றும் மூட்டு மருத்துவம் பல் மருத்துவம் இயன்முறை மருத்துவம் தோல் நோய் மருத்துவம் முதியோர் நல மருத்துவம் உள்ளிட்ட சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் இம்மருத்துவ முகாமில் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்களால் அவர்களுக்கான நோயை கண்டறிந்து அதற்கான முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சை மற்றும் தொடர் நடவடிக்கைக்காக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் சிகிச்சை பெற வழிவகை செய்யப்படும். இச்சேவைகள் மூலம் சுகாதார விழிப்புணர்வு கல்வி வாயிலாக உடல் நல மேம்பாடு தனிநபர் ஆரோக்கியம் மற்றும் மக்கள் நல் வாழ்வு மேம்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் இம்மருத்துவ முகாமில் செய்யப்படும் ஆய்வக பரிசோதனைகளான இரத்த முழு பரிசோதனை சிறுநீர் முழு பரிசோதனை இரத்த சோகை அளவு பரிசோதனை கர்ப்ப உறுதி பரிசோதனை இரத்த உறைதலை கண்டறிதல் மலப் பரிசோதனை இ.எஸ்.ஆர் இரத்தவகை கண்டறிதல் சளி பரிசோதனை இரத்த சர்க்கரை அளவை கண்டறிதல் இரத்த கொழுப்பளவு யூ யூரியா கிரியாட்டினின் டைபாய்டு பால்வினை நோய் எச்.ஐ.வி மஞ்சள் காமாலை-பி கொரோனா பரிசோதனை மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை இருதய சுருள் வரைபடம் ஸ்கேன் பரிசோதனை இரத்த தடவல் முகாமிற்கு வரும் பயனாளிகளுக்கு உடல் எடை உயரம் மற்றும் இரத்த அழுத்தம் பார்க்கப்படும் என்று கூறினார்.

இதில் ஆவடி மாநகராட்சி மேயர் ஜி.உதயகுமார் ஆவடி மாநகராட்சி ஆணையர் கே.தர்பகராஜ்,பூவிருந்தவல்லி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் செந்தில் குமார், மண்டல குழு தலைவர்கள் ஆவடி மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.