பதிவு:2022-06-27 12:44:27
பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில் சமையலர் மற்றும் முன்னாள் ராணுவ வீரரை ஓட ஓட அடித்த விடுதி காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரை நிர்வாண போராட்டம் :
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த பள்ளிப்பட்டு தாலுக்கா உட்பட்ட அத்திமாஞ்சேரி பேட்டையில் மாணவர் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி இயங்கி வருகிறது அந்த விடுதியில் சமையலராக பழனி என்பவர் பணியாற்றி வருகிறார் இவர் இந்திய ராணுவத்தில் சுமார் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் அதன் பிறகு அரசு விதியின் படி பணியில் சேர்ந்தார் இந்த நிலையில் அதே விடுதியில் விடுதி காப்பாளராக டி.பி கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் சமையலுக்கு தேவையான எண்ணெய் அரிசி பருப்பு போன்றவற்றை கிருஷ்ணன் என்பவர் வெளியில் விற்பதை கண்ட பழனி கேட்டதற்கு நீ யார் அதை கேட்க நீ போய் என்னுடைய காரையும், வீட்டை சுத்தம் செய் உன்னுடைய வேலை இதுதான் என்று கூறியுள்ளார். அதை செய்யவில்லை என்றால் உன்னை பணியிலிருந்து நான் நீக்கி விடுவேன் . ஏற்கனவே மூன்று பேரை பணியிலிருந்து நீக்கி இருக்கிறேன் அடுத்ததாக உன்னை நான் நீக்கி விடுவேன் என்று மிரட்டியிருக்கிறார் உடனே பழனி என்பவர் இந்த வேலையை என்னால் செய்ய முடியாது என்று கூறியதற்கு டி. பி கிருஷ்ணன் என்பவர் பழனி என்பவரை ஓட ஓட விரட்டி அடித்துள்ளார்
அதைத் தொடர்ந்து அவர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்து பின்னர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து பின்னர் அலுவலகம் முன்பு அரை நிர்வாண தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விடுதி காப்பாளர் டிபி கிருஷ்ணன் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி குடும்பத்துடன் தீக்குளிப்பேன் என்றும் என்று ஆவேசமாக தெரிவித்தார்.