பதிவு:2022-06-28 23:07:14
திருவள்ளூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜ.க மத்திய அரசு கொண்டு வந்த இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நேற்று திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மற்றும் திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் மத்திய பா.ஜ.க மத்திய அரசு கொண்டு வந்த இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் வழக்கறிஞர் வி.இ. ஜான் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைத்தலைவர்கள் அருள்மொழி, வடிவேல்,ஓ.பி.சி அணியின் மாநில செயலாளர் வெங்கடேஷ், மாநில செயலாளர்கள் சி.பி.மோகன்தாஸ், அஸ்வின், மாவட்ட பொது செயலாளர் வி.எஸ்.ரகுராமன், மாவட்ட விவசாய பிரிவு தலைவர் அருள்,எஸ்.சி, எஸ்.டி,மாவட்ட தலைவர் வக்கீல் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணை செயலாளர் ஆனந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு இளைஞர்களுக்கு துரோகம் விளைவிக்கும் அக்னிபாத் திட்டத்தை கண்டித்தும், உடனடியாக இந்தத் திட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.