திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் மூன்றரை வயது குழந்தை பலி

பதிவு:2022-06-28 23:11:12

திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் மூன்றரை வயது குழந்தை பலி

திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் கிராமத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் மோதியதில் மூன்றரை வயது குழந்தை பலி

திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஒன்றியம் திருப்பாச்சூர் ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் கோயில் தெரு கொசவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், இவரது மனைவி கயல்விழி. இவர்களது குழந்தை பவன்.மூன்றரை வயது குழந்தையான பவன் வீட்டு வாசலில் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது திருப்பாச்சூர் அடுத்த தங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த டில்லி என்பவர் டிராக்டரில் செங்கல்லை ஏற்றிக்கொண்டு பெருமாள் கோயில் தெரு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது குழந்தை பவன் விளையாடிக் கொண்டிருப்பதை அறியாத டிராக்டர் டிரைவர் குழந்தை மீது பலமாக மோதியுள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தது.

இதுகுறித்து குழந்தை பவனின் தந்தை ராஜசேகர் திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. சேர்த்த நிலையில் டிராக்டர் மோதி குழந்தை பவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.