ஒற்றைத் தலைமையிலான அதிமுகவுக்கு மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை 99 சதவிகிதம் பேர் இபிஎஸ்-க்கு தான் ஆதரவு

பதிவு:2022-06-30 22:05:39



ஒற்றைத் தலைமையிலான அதிமுகவுக்கு மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை 99 சதவிகிதம் பேர் இபிஎஸ்-க்கு தான் ஆதரவு : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தெரிவித்தார் :

ஒற்றைத் தலைமையிலான அதிமுகவுக்கு மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் வரை 99 சதவிகிதம் பேர் இபிஎஸ்-க்கு தான் ஆதரவு

திருவள்ளூர் ஜூன் 30 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கு சால்வை அணிவித்து முன்னாள் அமைச்சர் வரவேற்றார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொது மக்கள் அதிமுக தொண்டர்கள், கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவருமே எடப்பாடி கே பழனிச்சாமி தான் ஒற்றைத் தலைமை ஏற்க வேண்டும் என விரும்புகிறோம். நான் தான் இந்த கட்சிக்கு தலைவராக வருவேன் என்று யாரும் சொல்லவில்லை. தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்கள் அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் என அனைவருமே இதை தான் வலியுறுத்துகின்றனர். கடந்த காலத்தில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவராக தொடங்கவில்லை., மக்களும், ரசிகர்களும், பெரும்பான்மையான மக்களின் எண்ணத்தில் தான் அதிமுக தொடங்கப்பட்டது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜெயலலிதாவை ஒற்றைத்தலைமையை ஏற்கும் போது பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், பெரும்பான்மையான மக்கள் தொண்டர்கள் நிர்வாகிகள் அம்மாவின் பக்கம் தான் இருந்தனர். 1989-ல் தேர்தலுக்குப் பிறகு ஒற்றை தலைமையை உருவாக்கி இரட்டை இலை சின்னத்தை ஜெயலலிதா தான் மீ்ட்டார் என்று தெரிவித்தார்.

மேலும், தற்போது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் அதிமுக வுக்கு தலைமை ஏற்க வேண்டும் என்பது எதார்த்தமான உண்மை. அதிமுகவில் யாரையோ ஓரம் கட்ட வேண்டும்...பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை. இது கட்சி பிரச்சினை. பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பிரச்சினை குறித்து நீதிமன்றம் சென்றோ, ஒரு சில ஊடகங்கள் மூலமாகவோ இதை தீர்க்க முடியாது. தற்போது அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பெரும்பாலானோர் ஈபிஎஸ் பக்கம் தான் உள்ளனர்.

அண்மையில் தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்திலும் யார் பெயரையும் முன்னிறுத்தி பேசவில்லை.. ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்பதை வலியுறுத்தியதாக தெரிவித்தார். மேலும் வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமையில் தலைவராக வருவது நிச்சயம் ஈபிஎஸ் தான் என்றும் அதற்கு மாற்றுக் கருத்து இல்லை எனவும் தெரிவித்தார். அதிமுகவை வழிநடத்த வேண்டும் என்பதே பொது மக்களின் எண்ணமாக உள்ளது என்றார்.

திருவள்ளூர் மாவட்டத்திற்கு வருகை தந்த சசிகலாவுக்கு ஒரு சிலரின் காழ்ப்புணர்ச்சியால் கூட்டி வரப்பட்ட மக்கள் தானே தவிர அவர்கள் ஆர்வத்துடன் அவரை காண வந்த கூட்டமல்ல என்றார். சசிகலா தினகரன் ஆகியோர் இரு வேறு கருத்துடன் செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பொதுச் செயலாளர் பதவியை ஒரு காலத்தில் சசிகலா வேண்டாம் என்றும் மீண்டும் பொதுச் செயலாளர் என சொல்லி வருவதாகவும் அவர்களின் நிலைப்பாட்டை தெரிவத்தார். அதிமுகவை எம்ஜிஆர் , அம்மாவை ஏற்றுக் கொண்ட ஒவ்வொரு அதிமுக தொண்டனும், ஒவ்வொரு நிர்வாகியும்,தலைவனும் கட்சியை காப்பாற்ற வேண்டும் என நினைக்க வேண்டுமே தவிர இந்த கட்சியை கெடுப்பதற்காக நீதிமன்றத்திற்கு செல்வதோ, இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பதோ தவறான விஷயமாக தான் கருதுவதாக தெரிவித்தார்.

திமுக தமிழகத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. இவர்களின குடும்பத்திற்காக தான் இந்த ஆட்சி நடைபெறுகிறது என்றும், அதிமுக தலைமயில் அதுவும் ஒற்றைத் தலமைையை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். திருவள்ளூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை 5 மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைச் செயலாளர்கள் , அணி நிர்வாகிகள் வரை ஒட்டெடுப்பு நடத்தினாலும், 99 சதவிகதம் பேர் ஈபிஎஸ்க்கு ஆதரவாக தான் வாக்களிப்பார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் இன்பநாதன், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், சுதாகர், மாதவன், சீனிவாசன், குமார், ரவி, மற்றும் திருவள்ளூர் நகர செயலாளர் கந்தசாமி, பேரூராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜெயவேலு, பொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.டி.இ. சந்திரசேகர், இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன், ஜோதி, ராஜி, தியாகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.