திருவள்ளூரில் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

பதிவு:2022-06-30 22:11:52



திருவள்ளூரில் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூரில் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் ஜூன் 30 : தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி;யை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் மாணவ, மாணவியர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

“நான் முதல்வன்” என்ற தலைப்பில் மாணவச் செல்வங்களுக்கு ஒரு புத்துணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்கள் எதிர்கால வாழ்க்கை தொலைநோக்கு திட்டத்தை வடிவமைக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சியை முதல்வர் துவக்கி வைத்து, தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கற்ற, பயின்ற மாணவச் செல்வங்கள் எதிர்காலத்தில் வலுவான சமுதாயத்தை, உருவாக்க வேண்டும் என்பது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் சென்னையில் ஆரம்பித்து வைத்தார். அதிலிருந்து அடுத்ததாக மாவட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்ற அட்டவணை வந்தவுடன் தமிழகத்திலேயே முதன் முறையாக நடைபெறும் 2-3 மாவட்டங்களில் நம் திருவள்ளூர் மாவட்டமும் ஒன்றாகும் என்பதில் நாம் மகிழ்ச்சி கொள்ள வேண்டும்.

கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக நம் திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும்போது ஒரு நல்ல பயன் மாணவர்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திட்டத்தை பொறுத்தவரை நம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகமும், தமிழ்நாடு பள்ளிகல்வித் துறையும் சேர்ந்து “நான் முதல்வன்” என்ற முதலமைச்சரின் நேரடி பார்வையில் இருக்கக்கூடிய திட்டத்தின் ஒரு பாகமாக இன்றைக்கு கல்லூரி கனவு என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது.

. தமிழகத்தில் இன்றைய தினம் கல்வியில் புதுப்பொலிவை ஏற்படுத்தி, எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு இந்தியாவிலேயே இல்லாத அளவிற்கு வீடு தேடி கல்வி, அவர்களுக்கு தேவையான அனைத்து கல்வி உபரகணங்களும், அவர்களை தரமான மாணவச் செல்வங்களை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஒரு பெரும் முயற்சி எடுத்ததன் அடிப்படையில் தான் இது போன்ற நான் முதல்வன் என்ற திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று கல்லூரி கனவு என்பதை உருவாக்கி உங்களுக்கு வழிகாட்டியான இந்த வகுப்புகளை நடத்துகிறார்கள். நம் திருவள்ளுர் மாவட்டத்தில் இருக்கின்ற மாணவச் செல்வங்கள் எங்களை பொறுத்தவரை அகில இந்தியாவிலேயே கல்வியில் முதலிடத்தில் இருக்க வேண்டும்

வருகின்ற கால கட்டத்தில் மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்கள் பேர் சொல்லும் அளவிற்கு உங்களுக்கான கல்வித் தரத்தையும், தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன். தமிழக முதல்வர் உங்களுக்காக அனைத்து திட்டங்களையும் தீட்டி செயல்படுத்தி வருகிறார். மாணவச் செல்வங்களாகிய நீங்கள் பல துறையில் பல வல்லுநர்களாக எங்களை வழி நடத்தி சென்று முதல்வரின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். இதற்கு உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி நடிகர் ரீகன் வாழ்க்கை வரலாற்றையும், ஆபிரகாம்லிங்கன் வரலாற்றையும், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள் எப்படி வாழ்க்கையில் சாதித்து பெரிய பதவிகளில் அமர்ந்தார்கள் என்பதை தெளிவாக எடுத்துரைத்தார்.

அதே நேரத்தில் பெற்றோரும் ஆசிரியரும் மாணவர்கள் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும் என்றும், திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் அகில உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க வேண்டும் என்றும் அதற்காக தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பேசினார். அதனைத் தொடர்ந்து, “நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் கல்லூரி கனவுகள்” என்ற வழிகாட்டுதல் கையேடுகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன்,(திருவள்ளூர்) ஆ.கிருஷ்ணசாமி (பூவிருந்தவல்லி),ச.சந்திரன் (திருத்தணி),மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.இராமன் மற்றும் திமுக மாவட்ட நிர்வாகிகள் தா.மோதிலால், சிட்டிபாபு, ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், மகாலிங்கம், நகர செயலாளர் சி.சு.ரவிச்சந்திரன்,தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா.அருணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.