பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் : மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தெரிவு செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர் தகவல்

பதிவு:2022-06-30 22:17:36



பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் : மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தெரிவு செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர் தகவல்

பள்ளி  மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகள் : மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் தெரிவு செய்ய வேண்டும் : மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் ஜூன் 30 : திருவள்ளூர் மாவட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பெறும் பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் மாவட்ட அளவில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி முதற்கட்டமாக பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி நடத்தி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க கட்டுரைப் போட்டிக்கு 25 மாணவர்கள், பேச்சுப் போட்டிக்கு 25 மாணவர்களுக்கு மேல் மிகாமல் இருக்கும் வகையில் தெரிவு செய்து திருவள்ளூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அவர்களுக்கு பெயர்ப் பட்டியலை 05.07.2022-ற்குள் அனுப்பப்பெற வேண்டும்.

தமிழ்நாடு உருவான வரலாறு,மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டங்களும்,தமிழ்நாட்டிற்காக உயிர்கொடுத்த தியாகிகள்,பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய தமிழ்நாடு, சங்கரலிங்கனாரின் உயிர்தியாகம்,மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் தந்தை பெரியார்,மொழிவாரி மாநிலம் உருவாக்கத்தில் மா.பொ.சி,சட்டமன்றத்தில் ஒலித்த தமிழ்நாடு,எல்லைப் போர்த் தியாகிகள், முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு 08.07.2022 அன்று காலை 10 மணியளவில் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி திருவள்ளூர், மணவாள நகர், கே.இ.நடேச செட்டியார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.

கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000,இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசாக ரூ.5000 வழங்கப்படும்.கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவ,மாணவியர்கள் தங்கள் பள்ளி தலைமை ஆசியரியரிடமிருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.