பதிவு:2022-06-30 22:19:28
வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், (ஆதிந), வடகரையில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்
திருவள்ளூர் ஜூன் 30 : திருவள்ளூர் மாவட்டம், வடகரையில் உள்ள வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், (ஆதிந), தொழிற்கல்வி பெறுவதற்காக இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில் பொருத்துநர்,மின்சாரப் பணியாளர், கம்மியர் மோட்டார் வாகனம் ஆகிய பிரிவுகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். அதேபோல் பற்றவைப்பவர்,கம்பியாள் பிரிவுகளில் சேர விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் ஆண்,பெண் இருபாலரும் ஓராண்டு மற்றும் ஈராண்டு தொழிற் பிரிவுகளில் சேர்க்கை நடைபெற உள்ளது. 14 வயது முதல் 40 வயதுடைய இருபாலரும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு ஏதும் இல்லை.விண்ணப்பக் கட்டணம் ரூ.50 மட்டும் Debit Card/Credit Card/Net Banking/G.Pay மூலம் செலுத்த வேண்டும்.
அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், (ஆதிந), வடகரை, சென்னை-52 தொழிற்கல்வி பெறுவதற்காக www.skilltraining.tn.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.07.2022 ஆகும்.மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் மற்றும் கலந்தாய்வு குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இதே இணையதளத்தில் வெளியிடப்படும்.
பயிற்சிக் கட்டணம் இல்லை. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் உதவித்தொகை மாதம் ரூ.750 ம் புத்தகங்கள், சீருடைகள். காலணிகள் மற்றும் இலவச பேருந்து பயண அட்டையும் மற்றும் அரசின் அனைத்து சலுகைகளுடன் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடுமாறும், வடகரை ஐ.டி.ஐ (044-29555659) மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்நெறி வழிகாட்டி மையம், திருவள்ளூர் (044-29896032) மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், திருவள்ளூர் (044-27660250) ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகி பதிவு செய்திடுமாறும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.