பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் 130 கிலோ 512 கிராம் பல மாற்று பொன் இனங்கள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பாரத ஸ்டேட் வங்கியினரிடம் ஒப்படைத்தார்

பதிவு:2022-07-01 13:13:31



பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் 130 கிலோ 512 கிராம் பல மாற்று பொன் இனங்கள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பாரத ஸ்டேட் வங்கியினரிடம் ஒப்படைத்தார்

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோயிலில் 130 கிலோ 512 கிராம் பல மாற்று பொன் இனங்கள் : இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பாரத ஸ்டேட் வங்கியினரிடம் ஒப்படைத்தார்

திருவள்ளூர் ஜூலை 01 : திருவள்ளூர் மாவட்டம், அருள்மிகு பெரியபாளையத்தம்மன் திருக்கோயிலுக்கு பக்தர்களால் உண்டியலில் மற்றும் காணிக்கையாக செலுத்தப்பட்ட பிரித்தெடுக்கப்பட்ட பலமாற்று பொன் இனங்களை ஒப்படைக்கும் விழா ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜீயின் முழு ஒத்துழைப்போடும், இந்து சமய அறநிலையத்துறையின் உயர் அலுவலர்களின் ஒத்துழைப்போடும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு 130 கிலோ 150 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை பாரத ஸ்டேட் வங்கியினரிடம் ஒப்படைத்து பேசினார்.

இந்த திட்டமானது தமிழ்நாட்டை மூன்று மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்திற்கு நம்முடைய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜீவும், ஒரு மண்டலத்திற்கு நம்முடைய முன்னாள் நீதிபதி மாலாவும், இன்னொரு மண்டலத்திற்கு முன்னாள் நீதிபதி ரவிச்சந்திரபாபுவையும் தமிழ்நாடு முதலமைச்சரால் அரசாணையிட்டு நியமித்து, இந்த தங்கங்களை பிரிக்கும் பணியை மேற்கொண்டோம்.

இந்த திட்டத்தை நிறைவேறுகின்ற பட்சத்தில், ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.20 கோடியாவது வைப்பு நிதியிலிருந்து இந்து சமய அறநிலையத்துறைக்கு வருமானம் வரும்.இந்த வைப்பு நிதி வாயிலாக அந்தந்த திருக்கோயிலுக்குண்டான திருப்பணிகளுக்கே செலவிடுகின்ற பொழுது, பக்தர்களின் வசதிக்கு தேவையான அனைத்து பணிகளும் விரைவில் நிறைவேறும். அதோடு மட்டுமல்லாமல் திருக்கோயிலின் அனைத்து அடிப்படை தேவைகளுக்கும் இந்நிதி பேருதவியாக இருக்கும்.

இந்த பலமாற்று பொன் இனங்களானது மும்பையிலே இருக்கின்ற ஒன்றிய அரசிற்கு சொந்தமான உருக்காலைக்கு அனுப்பி, உருக்கி, அந்த தங்க கட்டிகளை வைப்பு நிதியில் வைக்க உள்ளோம். ஒன்றிய அரசினுடைய அந்த உருக்காலைக்கூட வருகிற 5, 6, 7 ஆகிய தேதிகளை இப்பணிக்காக ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிகிறோம். வருகிற 10-ம் தேதிக்கு மேல் இவை வைப்பு நிதிக்கு செல்லும். இந்நிதி இந்த திருக்கோயிலின் அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

இதில் சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன்,இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன்,ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதியரசர் துரைசாமி ராஜீ, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜெ.கோவிந்தராசன் (கும்மிடிப்பூண்டி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), பரம்பரை மேலாளும் அறங்காவலருமான அஞ்சன் லோகமித்ரா. அம்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி மண்டல மேலாளர் ராஜலட்சுமி, இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை.சி.லட்சுமணன் (வேலூர்), மண்டல நகைகள் சரிபார்ப்பு துணை ஆணையர் ரமணி (வேலூர்), இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சித்ரா தேவி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.