திருவள்ளூர் மாவட்ட காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சைகை மூலம் கோஷம் எழுப்பி காத்திருப்பு போராட்டம்

பதிவு:2022-07-01 13:20:33

திருவள்ளூர் ஜூலை 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பில் ஒரு சதவிகித அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும்,வறுமை கோட்டின் கீழ் உள்ள தங்களுக்கு தொகுப்பேடு வழங்கிட வேண்டும்,மாதாந்திர உதவித் தொகை 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட வேண்டும்.ஆவின் பாலகம் அமைத்து வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும்,கொக்கோகோலா நிறுவனங்களில் ஒப்பந்த காது கேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்,அனைத்து கல்வி நிறுவனங்களில் அனுபவிக்க சைகை மொழி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று சைகை மொழி போராட்டத்தில் வலியுறுத்தினர்.