மரகதவல்லி தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவ தீர்த்தவாரி : ஏராளமான பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி சாமி தரிசனம்

பதிவு:2022-07-01 13:22:36

திருவள்ளூர் ஜூலை 01: திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் பகுதியில் உள்ள மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோவிலில் ஆனி மாத பிரம்மோற்சவம் கடந்த 22 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு திருமஞ்சனம் மற்றும் நரசிம்மர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்த நிலையில் ஆனி பிரம்மோற்சவம் ஒன்பதாவது நாளான இன்று நரசிம்மர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோர் அலங்கரிக்கப்பட்டு தங்கக் கவசங்கள் அணிவித்து மற்றும் நரசிம்மருக்கு பால் தயிர் தேன் சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு துளசி மாலை அணிவித்து தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து நரசிம்மர் மற்றும் சக்கரத்தாழ்வார் ஆகியோர் புடைசூழ கோவில் குளத்தில் இறங்கி நீராடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது அதைத்தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி நரசிம்மரை தரிசித்து அருள் ஆசி பெற்று சென்றனர்.